5 வகை நிலத்தில் தமிழ்

குறிஞ்சியில் ஆடியும்
குளிர் மருதத்தில் ஊர்ந்தும்
முல்லையில் ஓடியும்
அலை
ஆர்க்கின்ற நெய்தலில் வீசியும்
பாலையில் பாய்ந்தும்
பைந்தமிழ் வந்தாள் வலம்

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (3-Jul-13, 4:13 pm)
பார்வை : 152

மேலே