இனியும் வாழ்வேன் உனக்காகவே..............!

உன்னை கேலி செய்ய நான்
கேடு கெட்டவள் அல்ல
தாரமாக இல்லை என்றாலும்
தாயாக பார்த்து கொள்ள நினைத்தவள்

எனக்கு வழி துணை யாரும் இல்லை தான் - ஆனால்
எனது வழி எங்கும் உனது புகை படம் தான்

நான் நெருப்பானாலும் பிடிப்பது
உன்னைத்தான்............
நான் நீரனாலும் தீர்ப்பது
உன் தாகத்தை தான்...............

பாவியாக அலைகிறேன்
பாசம் கொண்டதினால் - நீ உன் அவளின்
பாவை நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்ததினால்

கண்ணீரில் மிதக்கிறேன் நான்
காப்பாற்ற நீ வருவாய் என்பதால் தான்........

அழுகையை மறைத்து சிரிக்கிறேன் நான்...
உனது கண்ணீரை காண துணிவு இல்லாமல் தான்........

வழி எங்கும் எனது காதல் ஊர்வலம் தான் - ஆனால் உனது ஊர்வலமோ ஆவலுடன் தான் ....

உன் ஆசையை நிறைவேற்ற முடியாத
ஒரு பாவியாக நான்
இருந்தும்,
உனது ஒற்றை வார்த்தை,
நீ எனக்கு தந்த வலிகளை,

எப்படியடா தந்தாய்.....?

என் கண்ணீரை துடைக்க கரம் பார்த்து
உன்னை எதிர் பார்த்தேன்
நீயோ.................
மறுபடியும் கண்ணீரையே தருகிறாய்
உனது அருகில் நன் இருந்தும்.........

எழுதியவர் : ரேவதி (4-Jul-13, 4:43 pm)
பார்வை : 271

மேலே