சாதித்து என்னப்பயன் ???/

மஞ்சள் வெயில் –என்
நெஞ்சை குதூகலப்படுத்திய
மாலை வேளை .

எந்த கிளியிடமோ பச்சையை
கடன் வாங்கிய வயல்வெளி
என் இருபுறமும் ...

கற்பனை தோள் சாய்ந்து
கவியை எண்ணி நடை
அளந்து கொண்டிருந்த போது.....

என் தொலைதூரத்தில் ஒர்
கலவரத்தீ – காரணம்
காதல் பற்றி கொண்டதால்...

செய்தி என்னவென்றால் ..
இச்சாதி ஆணுக்கும்
அச்சாதி பெண்ணுக்கும்
காதலாம் !!?

கவிஞன் என்று தலை நிமிர்ந்த எனக்கு
மனிதன் என தலை குனிவைவிட
வேறுயென்ன இருக்கு....

சாதிகளை ஒழிக்காமல் நாம்
சாதித்து என்னப்பயன் ???/

-ரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார். (5-Jul-13, 5:08 pm)
பார்வை : 114

மேலே