அமைதி ஆக்கம் தரும்!

வேர்பிடித்துக் கிளம்பும் விதைகள்
பூமியைப் பிளக்கும் போது
ஆரவாரம் செய்வதில்லை!

பெரிய மரங்கள் பெரும்
புயலில் பெயர்ந்து சாயும் போது
சப்தமிட்டே சாய்கிறது!

அழிவு..! ஏற்படும்போது
அதிக ஆரவாரம் செய்கிறது,
ஆரவாரம் அழிவைத் தரும்!

ஆக்கம்..! தரும் செயல்
அமைதியாக நடைபெறுகிறது,
அமைதி ஆக்கம் தரும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jul-13, 2:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 141

மேலே