மெல்லிய காதல்

சித்திரம் பேசுதடி....
கவிதை ஆடுதடி ....
கதைகள் பாடுதடி .....

பைத்தியம்
என்ற நீ
மேல் சொன்னவைகளில்
ஒன்றாய் இருக்க
பைத்தியமாய்
தூங்கிக் கொண்டிருக்கும்
என்னில் வந்த
கனவில்
நதியை முழுக்க
சுமந்து சென்ற
ஒரு கானகம்
ஆடை இழந்து
குழந்தையானது.....
குழந்தையின்
சிணுங்களில்
செத்துப் போன
ஈயின் கோரமுகம்
பயப் படுத்துகிறது
ஒரு மெல்லிய
காதலை......

எழுதியவர் : கவிஜி (11-Jul-13, 10:52 am)
Tanglish : melliya kaadhal
பார்வை : 191

மேலே