என் கனவுகள்

இந்தக் கனவுகள் வித்தியாசமானவை ...
இவை யாவும் விழித்தபடி கண்ட கனவுகள்...
ஐந்து ரூபாய் பயணச் சீட்டிற்கு
ஐநூறு ரூபாய் கொடுத்தாலும்
சினமடையா பேருந்து நடத்துனர்!
டிப்ஸ்க்கு தலை சொரியாத
உணவக ஊழியர் !
துணிக்கடையில்
மூன்று மணி நேரத்திற்குள்
தனக்கு வேண்டிய ஒரு புடவையை
தேர்ந்து எடுக்கும் மனைவி!
நதிநீர் பொதுவுடமை ஆகும் நாள் ...
பொய்க்காத வானம் ...
பொங்காத கடல் ...
நிஜமான கிரிக்கெட் !?
அரசியலில் மீண்டும்
காந்திகள், அண்ணாக்கள், கர்மவீரர்கள் ...
பிச்சைக்காரர்கள் இல்லாத
கோவில் வாசல்கள்!
சட்டைபைக்கு
முதலிடம் தராத
சாகா நட்பு !
இப்படியே கனவு நீள
உறங்கிப்போனேன் !!

எழுதியவர் : (12-Jul-13, 7:56 pm)
பார்வை : 78

மேலே