உன் கைகள் எங்கே ?

கணவனின் தேவைகளை கவனிக்க
வேண்டும் கைகள்
துணிகள் வெளுக்க மடிக்க
வேண்டும் கைகள்
பாத்திரங்கள் துலக்க
வேண்டும் கைகள்
ருசியாக சமைக்க
வேண்டும் கைகள்
சந்தைக்குச் செல்ல
வேண்டும் கைகள்
உன் குழந்தைகளை கவனிக்க
வேண்டும் கைகள்
பெற்றோரைக் காக்க
வேண்டும் கைகள்
உனக்கும் சோறு ஊட்ட உனை அழகு பார்க்க
வேண்டும் கைகள்
எனக்கு (அம்மா)ஒரு கவளம் சோறூட்ட
அன்போடு சிரித்து மகிழ்ந்து உறவாட
உன் கைகள் எங்கே ?

எழுதியவர் : தயா (14-Jul-13, 10:32 pm)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 76

புதிய படைப்புகள்

மேலே