நம் மகனா.. இப்படி செஞ்சுபுட்டான்

நாம் பிறந்த போது
அம்மா சொன்னது
" ஏங்க அவன் கண்ணு
மூக்கெல்லாம் பாருங்க
உங்கள மாதிரியே
இருக்கான் "

அப்பா சொன்னது
" ஆமா.. அவன்
கைவிரலெல்லாம் பாரு
உன்னமாதிரியே அழகா
இருக்கு"

சிறிது வளர்ந்த பின்னர்
அம்மா சொன்னது
" ஏங்க சாயந்திரம் வரும்போது
சிப்ஸ் பாக்கெட் ஒரெண்ணம்
கூடுதலா வாங்கிட்டு வாங்க
அதுனா அவனுக்கு ரொம்ப
புடிக்கும் "

அப்பா வாங்கிட்டு வந்ததோ
" ரெண்டெண்ணம் கூடுதல் "

வாலிபன் ஆன போது
அம்மா சொன்னது
" ஐயோ அவன் கம்ப்யுட்டெர
தொடாதீங்க அவன் வந்து
கத்தப்போரான் "

சொன்ன மாயமில்லை
அப்பா அங்கு இல்லை

என்று நொடிகள் ஒவ்வொன்றையும்
வடிகட்டி வடிகட்டி வளர்த்த
தாய் தந்தையரை

முதியோர் இல்லம்
கொண்டு சேர்க்க
முடிவெடுத்த பின்னரும்
பேசத் தகுதியற்றவர்களாய்
மனசுக்குள் சொன்ன வார்த்தை

" நம் மகனா.... இப்படி
செஞ்சுபுட்டான் "

எழுதியவர் : சங்கை முத்து (17-Jul-13, 8:22 pm)
பார்வை : 74

மேலே