ஐ.பி. மற்றும் என்.ஐ.ஏ. இவைகள் புலனாய்வு அமைப்புகளா அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளா..?
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இண்டிலிஜெண்ட் பீரோ ( IB) என்ற உளவு அமைப்பிற்கும், NIA என்ற உளவு அமைப்பிற்கும் பிரஸ் கவுன்சில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நற்பெயரை கெடுக்கும் ( அதாவது குண்டு வெடித்தவுடன் அந்த குண்டு வைத்தது முஸ்லிம்கள் என்று கூசாமல் சொல்வதை...) வகையில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து 10 நாளிதழுக்கு எதிராக பாப்புலர் ஃ ப்ரண்ட்
ஆஃ ப் இந்தியா அளித்த புகாரின் அடிப்படையில், பிரதி வாதங்களை கேட்டறிந்த பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு இந்த விளக்க நோட்டீஸ் - ஐ இந்த இரண்டு உளவு அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளார்.
தாங்கள் செய்தி வெளியிட்டது ஐ.பி.அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் என்று சண்டே கார்டியன், டெக்கான் குரோனிக்கல் ஆகிய பத்திரிக்கைகளும், என். ஐ.ஏ. விடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதாக பயனீர் பத்திரிக்கையும் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, மத்திய புலானாய்வு ஏஜன்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி மார்கண்டேய கட்ஜு தலைமையிலான பிரச் கவுன்சில் உத்தரவிட்டது.
மேலும், ஐந்து பத்திரிக்கைகளுக்கு எதிரான புகாரில் பாப்புலர் ஃ ப்ரண்ட் அமைப்புக்கு ஆதரவான தீர்மானத்தை பிரஸ் கவுன்சில் எடுத்து உள்ளது.எதிர்காலத்தில் இத்தகைய செய்திகளை வெளியிடக் கூடாது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ், இன்குலாப் ( உருது ), தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நவபாரத் டைம்ஸ் ( ஹிந்தி ), ஏசியன் ஏஜ் ஆகிய பத்திரிக்கைகளுக்கு எதிரான புகாரில் தீர்பளித்து பிரஸ் கவுன்சில் உத்தரவிட்டது.
அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக செய்தியை வெளியிடும் போது மிகவும் கவனம் தேவை என்று கவுன்சில் அறிவுறுத்தியது.
தைனிக் ஜாக்ரன் மீரட், தைனிக் ஜாக்ரன் டெல்லி ஆகிய பத்திரிக்கைகள் தவறான செய்தி போட்டதற்காக விளக்கம் அளிக்க கூடுதல் கால அவசாகம் கோரியுள்ளன. நான்கு வாரங்களுக்குப் பிறகு கவுன்சில் மீண்டும் விசாரணை நடத்தும்.
நன்றி
தூத்துஆன்லைன்
மத்திய உளவு அமைப்புகளே ஒரு மதத்திற்கு எதிராக அதாவது இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பொய் செய்தியை ஏன் பரப்ப வேண்டும்..? அதிகாரப்பூர்வ உளவு அமைப்புகள் இவ்வாறு செயல்படுகின்றன என்றால் இந்திய அரசு முழுதும் இந்துத்துவம் இந்துமயமாக்கல் என்று ஆலமரம் போல செழித்து ஓங்கி வளர்ந்துள்ளன என்று கருதலாமா என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்...!
சங்கிலிக்கருப்பு