மலர்மிசை ஏகினான் !
மலர் மிசை ஏகினான் மாணடிசேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் (திருக்குறள் -3)
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் அருளிய திருக்குறளில் உள்ள கருத்துகள்
அன்றும் இன்றும் என்றும் ,நிலைத்து பயன் தரக்கூடிய தெய்வத்தன்மை வாய்ந்தவையாக உலா வருகின்றன
கடவுள் வாழ்த்தில் 3ம் திருக்குறளன
மலர்மிசை ஏகினான் என்பதன் பொருளை
பல உரையாசிரியர்கள்
அன்புடையவரின் மனமாகிய மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவநிந்திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர்கள் இந்த உலகில்
நிலைத்து வாழ்வார் என்ன்றே பொதுவாக எழுதியுள்ளார்கள்
ஆனால் திருவள்ளுவர் கூறும் மலர்மிசை ஏகினான் என்பதற்கு உட்பொருள் வேறு உண்டு என்பதையே இக்கட்டுரையில் விளக்கமுற்படுகிறேன்
திருவள்ளுவர் ஒரு சித்தர் அவருக்கு யோகநிலையில் உள்ள பலபடிகள் தெரியும்
யோகநிலைக்கும்,குண்டலினி சக்திக்கு ம்
அடிப்படை ஆதாரங்கள் 6 ஆகும் .
ஆதாரங்கள் என்பவை நம் உடலில் உள்ள சக்தி
மையங்கள் எனக்கொள்ளலாம் .
1மூலாதாரம் 2ச்வாதிச்டானம் 3மனிபூரகம்
4அனாகதம் 5விசுத்தி 6ஆக்னெயம்
ஆகிய 6ஆதாரங்கலும் தமிழில் 1மூலம் 2 பாலினக்குறி3கொப்புழ் 4நெஞ்சம் 5தொண்டைக்குழி
அல்லது மிடறு 6நெற்றிப்பொட்டு/புருவநடு சக்தி சேமிக்கப்பட்டு தேவையான போதுபயன்படுத்திக்கொள்வது என்பர்.
6நிலக்கும் மேலே ஏழாம் நிலை இருக்கிறது .அதுதான் சஹஸ்ராரம் .
இது உச்சந்தலையில் ஆயிரம் இதழ் விரிந்த தாமரை மலர் போல் அமைந்துள்ள மூளைப் பகுதியாகும்
யோகநிளையில்முதிர்ச்சி அடைந்தவர்களுக்கு இந்த ஏழாவது சக்கரமான சஹாஸ்ரரம் மூலம் உலக நடப்பனைதும் யோகநிலையில் அமர்ந்து கொண்டே அறிந்து கொள்ளும்
ஆற்றல் வந்து சேரும் . இந்த ஆற்றலைப் பெற்றவர்களைத்தான் (ஆயிரம் இதழ் விரிந்த தாமரை )மலர் மிசை ஏகினான் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.
ஆகவே ஏழாம் சக்ரமான சஹஸ்ராரம் உள்ளசக்தி மையத்தினைவரப் பெற்றவர் யாரோ அவரே மலர்மிசை ஏகினான் , அவரின் பெருமைக்குரிய திருவடிகளை தொழுது அவரின் திருவடிகளையே என்றும் நினைதிருப்போருக்கு
அந்த ஞானியாரின் ஆசி கிடைக்கப்பெற்று இப்போவுலகில் நீண்ட நாட்கள் நிலைத்து வாழ்வார்
என்பதே இந்த திருக்குறளுக்கு சரியான பொருளாகும்
***************************************************************