வாலியும்,வலியும்....
வார்த்தைகளோடு வாழ்க்கை நடத்தியவன்...
பாடல்களால் பாடம் கற்றவன்..
பாடம் கற்பித்தவன்...
அனைவரின் இதயங்களிலும் ஒலிக்கிறது
நீ எழுதிய பாடல்கள்...
இன்று அவன் இதயம் என்னும் பாடல்
மட்டும் துயில் உறங்குகிறது...
பதினைந்தாயிரம் பாடல்கள் பரவிக்கிடக்கிறது..,
எட்டுத்திசையிலும்...
அவன் உயிர் பாடல் போன திசை எங்கே...?
நீ கவிதைகளின் வாலி...
இன்று தந்து செல்கிறாய் தீராத வலி...
மரணித்தது உன் உடலும்,உயிரும் மட்டும் தான்...
மரணமில்லாதது நீ விட்டு சென்ற நினைவுகள்...
உன்னை சுமந்து செல்வது மனிதர்கள் அல்ல,
நீ எழுதிய பாடல்கள்...
உன் பாடல்கள் எங்கோ ஒருவரால் கேட்கப்படும் வரை,
வாழ்ந்து கொண்டு தான் இருப்பாய்...
வாலி சகாப்தம்... சரித்திரம்...
அழியாது....

