மென்பொருள் யுகம்

கணினிக்குள் தரணி
இணைக்கும் வலையம்-

மென்பொருள் யுகமிதில்
என்ன பொருளானதோ
நம் இதயம் .............?

திரைகட லோடாமல்
திரை விரித்தோம் நாம்
திரவியந் தேட!

இங்கிலாந்து வாழ்
மகளுக்கு இங்கிருந்து
இந்தியக் கைமணம்
சொல்லுந் தாய்க்கும் ..

மகனனுப்பும் பணத்தை
மண்ணாக்கி மனையெழுப்பி
மகிழ்வுறுந் தந்தைக்கும் ...

சிலநாள்
மென்பொருள் யுகம்
நன்"பொருள்" யுகமே !?

டாலர்கள் பெருக-
நாம் பெறுவது
மணமுறிவுகளை !
பெருக்குவது
முதியோ ரில்லங்களை!

பணங்கோடி கொடுத்தாலும்
பண்புபாசம் கிடைத்திடுமா ?
உசுருபோனா திரும்பிடுமா ?

தகவல் தொழில்நுட்பம்
வளர்ந்து வளர்ந்து- அண்டை
வீட்டானைகூட -அயல்
நாட்டானாக்கி விட்டது

உறவுகளை மறவும்-சிறு
வரமருளி விட்டது ..!

சடலமாய்க் கிடக்குமவன்
தந்தைக்கு இரங்கற்பாவை
ஈ-மெயில் அனுப்பக்கூட
விஞ்ஞானம் உதவக்கூடும் ...

அவசரமென்று அதையும்
பயன்படுத்த வன்பொருளாய்
உள்ளம் கொள்ளாதே..

வெளிநாடு வாழ்நண்பனே ..!

எழுதியவர் : நிலாநேசி (19-Jul-13, 11:30 pm)
சேர்த்தது : நிலாநேசி
பார்வை : 81

மேலே