(22)தந்திர காட்டில் நான் (3) குகை நோக்கிய பயணம்
.................. (3) குகை நோக்கிய பயணம் .................
============(தொடர்ச்சி )=============
எதோ ஒன்று என்னை பிடித்துள்ளது ....
எதோ ஒன்று என்னை அணைத்துள்ளது ....
எதோ ஒன்று எனக்கு முழு பாதுகாப்பு
தருகிறது !!!!
நான் நகர்கிறேன் ஆனால் அது மட்டும்
நகராமல் !!!
நான் நுகர்கிறேன் ஆனால் அது மட்டும்
நுகராமல் !!!
நான் உறங்குகிறேன் ஆனால் அது மட்டும்
உறங்காமல் !!!
அதிசயம்தான் ,
என்னை பிடித்துள்ள விசயம்தான் என்ன ???
ஓவ்வொரு மரத்தின் ஆவியும் என்னை
அணைப்பதாக உணர்கிறேன்
வெண்ணிலவும் -விண்மீன்களும்
எனக்குள் உலவுவது போல இருக்கிறது !!!
நான் பேசி பல நாள் ஆகிறது
ஏதோ ஒரு மௌன திமிங்கலம்
எனக்குள் இருந்து என்னையே விழுங்குகிறது !!!!
சில சமயம் நான் இல்லாத இடமே இல்லை
என்பது போல் உணர்கிறேன்
சில சமயம் நானே இல்லாதது போல
உணர்கிறேன் !!!!
இதனை மாயை என்பதா ???
மூளை கலங்கி முத்திவிட்ட
பைத்தியம் நிலை என்பதா ???
என்ன செய்து கொண்டிருக்கிறேன்
எனது வாழ்கையின் எதிர்காலம் குறித்த
சிந்தனையே இல்லையே ........
எதிர்காலம் என்னவானால் என்னடா
இப்போது நீ இங்கு இருக்கிறாயா ???
அட, முட்டாளே அதை நீ கவனி
இந்த நொடி சந்தோசத்தை தொலைத்து
அடுத்த நொடி சந்தோசத்தை எண்ணும்
எதிர்காலம் இருந்தாலும் இல்லாமல்
போனாலும் ஒன்றுதானடா !!!!!!
எங்கிருந்தோ ஒரு அசரீரி .............
===========(தொடரும் )===============
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

