kaappagangal

இலக்கு நோக்கிய பயணத்தில்...
தொலைந்து போகிறதோ.. .
ஆன்மாவின் சுவாசம்.. .
பணம் தேடும் பயணத்தில்...
குழந்தை காப்பகத்தில்...
முதியோராய் பழக்கப்படும்...
மழலைகள்....
முதியோர் காப்பகத்தில்...
குழந்தையாய் பராமரிக்கப்படும் ...
முதிர்ந்தோர்....
அகத்துள் அன்புக்கு காப்பிட்டு...
புறப் பொருள் ஈட்டி....பயனேது...
வணிகத்தின் கைதிகளாய் கட்டுண்டோர்...
அன்புக் கைதிகளாய் மாறுவதும். ..
நிகழுமோ...

எழுதியவர் : nagammai.ramanathan (22-Jul-13, 3:40 pm)
பார்வை : 108

மேலே