ஆனந்தப் புன்னகையின் அரங்கேற்றம்...

அன்பின் நிழல்
உன்னைச் சூழ்ந்திருந்தால்
உறவுப் பறவைகள்
உன்னைத் தேடும்!
புதுமையின் வைகறையில்
பூபாளம் பாடினால்
மகிழ்ச்சியின் கீற்றுகள்
மனதில் படரும்!
வெற்றியின் வேகத்தை
நிதானத்தில் நிறுத்தினால்
தோல்வியிலும்
சுகம் காண முடியும்!
அடுத்தது என்னவென்று
அடியெடுத்து வைத்தால்
ஆனந்த புன்னகை
அரங்கேற்றம் நிகழ்த்தும்!

எழுதியவர் : (23-Jul-13, 1:20 pm)
பார்வை : 68

மேலே