அருவி

முகட்டினில் பிறந்து
பகட்டாக விழுந்து
கடலினில் கரைந்துவிட்டாயே!
கற்பிக்க நினைத்தாயோ
விதி அது
வலியது என்று!

தடைகள் பலயிருந்தும்
தப்பித்து தவழ்ந்துவந்து
இலக்கினை அடைந்துவிட்ட
இறுமாப்போ! - நீ
பொங்கி வழிந்தாலும்
போகுமிடம் கடல்தானே!

மண்ணுக்குள் போனபின்பும்
மறுபிறவி உண்டென்றார்
ஆழ்கடல் சேர்ந்தநீயும்
ஆவியாகிபின் மழையாதலாலா?

அழகென்ற திமிரோ
அடங்க மறுக்கிறாய் - நீ
ஆர்பரிப்பது அழகே!
ஆள்பரிப்பது அழகோ?

எழுதியவர் : இட்ஸ் மீ (24-Jul-13, 4:05 am)
சேர்த்தது : நாகராஜன்
பார்வை : 83

மேலே