ஜாதி மத இன வெறி.

நிழலாய் முன்னேறிய மனிதன்
நிஜமாய் முன்னேறவில்லை
என பல்லிளித்து காட்டுகிறது
ஜாதி மத இன வெறி.

வெளியே வாசனை திரவியம்
பூசி திரியும் மனித மிருகங்களின்
உள் நாற்றமே
ஜாதி மத இன வெறி

பணம் தேடும் பேய்களாக உழலும்
மனித கூட்டத்திற்கு மனம் இல்லை
என மன்றத்திலே சொல்கிறது
ஜாதி மத இன வெறி

தனிப்பட்ட சுயநலமும்
கூட்டு சுயநலமும்
கூடி பிணைந்ததுதான்
ஜாதி மத இன வெறி

உயர்ந்தோன் என எண்ணுபவனை கீழோனாகவும்
மதிப்புடையவன் என எண்ணுபவனை
மதிகெட்டவனாகவும் மாற்றுவது
ஜாதி மத இன வெறி

மனிதனை அவன் எச்சமாய்
ஆக்குவதும்
மனித குலத்திற்கு அச்சமாய்
ஆவதும்
ஜாதி மத இன வெறி

மானமுடையோர் என எண்ணிக்கொண்டு
மனிதனை மனிதன் கொன்று
மலத்தினை தன மேலே பூசிக்கொள்வது
ஜாதி மத இன வெறி

படித்தவனையும் பண்பிலாதவனாய்
நண்பனையும் நயவஞ்சகனாய்
குணமுள்ளவனையும் கொலைக்காரனாய்
மாற்றுவது
ஜாதி மத இன வெறி.

-தமிழ்மணி

எழுதியவர் : தமிழ்மணி (25-Jul-13, 7:36 am)
பார்வை : 3806

மேலே