சிறகுகள் எங்கே?

கறைக்க கறைக்க
கல்லும் கறயும்
உன் இதயம் அறியாமல்
முன்னோர் சொன்ன
பழமொழி அன்றோ?

பெண் மனம் பூ.
நான் படித்த வரிகள்
ஏட்டு சுரைக்காய்
கறிக்குதவா, கதைதானோ?

மல்லிகையாய்
என் மனம் மணந்தும்
மங்கையே!
நீ சூட மறுப்பது,
விந்தையே!!

காகித பூவாய்
காட்சி பெற்றது
உன் விழிகளின் குற்றமா?
உன்னில் வீழ்ந்தவன் குற்றமா?

மன்றம் தேடும்
மாட புறாவே!
என் வானில்
பறக்க மட்டும்
உன் சிறகு விரியாதோ?

குற்றம் என்ன
என்னில் கண்டாயோ?
குலமகளே!
நம் குடும்ப விளக்கை
ஏற்றாமல் குளிர்காய்கிறாய்
என்னை தீக்கு இரையாக்கி.

பாரதி பாடாத
புதுமை பெண்ணே!
படித்து அறிவேன்
உன்னை நன்றே.
- செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : - செஞ்சிக்கோட்டை மா.மணி (25-Jul-13, 10:54 am)
சேர்த்தது : Mani 8
பார்வை : 85

மேலே