மனம் பறித்த ம(ங்)ல்லிகை
உன்விரல் தொடுத்தபூவை கூந்தலில் சூடும் பெண்ணே
பூவும் நீயும் தேனீயும் நானும் ஒன்றென்று நீ அறியாயோ
உன்னை நான் தேடுகிறேன் தேனீ பூவை தேடுகிறது..
உன்னை சேரவே பூச்செடியின் நுனியில்
பூக்களெல்லாம் தவமிருக்கிறது மொட்டாக - தினம்
உனக்காக நான் தவமிருப்பது போல..
உன் பூவிரல் பட்டதாலே
மொட்டெல்லாம் மலர்ந்தது வெட்கத்தில் - தினம்
உன் வெட்கத்தில் நான் மலர்ந்தது போல..
உன் கருங்கூந்தல் சேரவே மல்லிகை
பூக்களெல்லாம் மாறியது வெண்மையாக - தினம்
உன் வெண்குணம் கண்டு நான் மாறியது போல
உன் பூவிழி பட்டதாலே
பூக்களெல்லாம் பூத்தது புன்னகையில் - தினம்
உன் புன்னகையில் நான் பூத்தது போல..
உன் கூந்தல் வாசத்தாலே
பூக்களெல்லாம் வீசியது வாசம்-தினம்
உன் வாசம் வீசி நீ என்னை கடப்பது போல..
உன்னில் தான் பார்க்கிறேன்
பூவே சூடியுள்ளது இன்னொரு பூவை -தினம்
உன் இதயத்தை என் இதயத்தில் பூட்டியது போல
உன் அழகை கண்டதாலே
பூக்களெல்லாம் வாடின பொறாமையில் - தினம்
உன்முகம் காணமல் நான் வாடியது போல..
உன்னை விட்டு பிரியமுடியாமல்
பூக்களெல்லாம் சருகும் - தினம்
உன்னால் நான் சருகுவது போல..
உன் கார்மேக கூந்தலில் சூடுகிறாய்
பூக்களெல்லாம் பெண்ணே - தினம்
உன்னோடு என்னை சூடுவது எப்பொழுது..????