முறையாக விதைத்தால் விளையும்
வண்ணக் கற்களின் குவியல்
எண்ணங்களின் சிதறல்கள்
சிந்தையில் உள்ளதைப் போல !
கற்கள் காட்சிக்கு அழகுதான்
இடம் மாறிட்டால் மதிப்பில்லை
காலத்திற்கு ஏற்ப விலைகூடும் !
சிந்தையில் சிதறிடும் சிந்தனைகள்
சந்தைக்கு வாராத விந்தைகள்
மனதில் பதிந்துள்ள படிகங்கள் !
ஈர்த்திடும் நெஞ்சை இக்கற்கள்
வார்த்திடும் பல வடிவங்களை
பார்த்திடும் வியப்புடன் விழிகள் !
தேங்கிடும் எண்ணக் குவியல்கள்
தூங்கிடும் நெஞ்சில் தூசுக்களாய்
கலந்திருக்கும் பல நல்வித்துக்கள் !
முறையாக விதைத்தால் விளைந்திடும்
முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும்
சமுதாயப் பயிர்க்கும் மருந்தாகும் !
பழனி குமார்

