அடையாளம்

கழுத்தில் கிடக்கும்
கயிற்றின் விட்டத்துக்குள்ளே தான்
கண்பார்வையின் தூரம்
சுதந்திரமாக ,
காலில் மாட்டிய மெட்டியின்
அளவுக்குள்ளே நடைப்பயணம்
சுதந்திரமாக ,

திருமணம் இருவருக்கு
மாலை இருவருக்கு
மாலையிட்ட வடுவாக
தாலி மட்டும் ஒருவருக்கு
எப்படிச் சாத்தியமாகுது
எப்படிச் சமத்துவமாகுது ,

கண்முன் தெரிகிறது
கணக்கிலடங்காத வேறுபாடுகள்
எல்லாவற்றிற்கும் சேர்த்து
என்னன்னவோ கதை சொல்கிறார்கள்
எல்லாம் முடிந்த பின்னும்

எதுவும் நிரூபனமாகவில்லையெனில்
ஒற்றைவரி ஒரே ஒற்றை வரி
"ஆயிரம் குற்றங்கள் இருந்தாலும் -நான்
ஆண் பிள்ளை ."
இப்படியொரு சப்பக்கட்டு கட்டியே
சாத்தியப்படுதிச் சாதித்தும் விட்டார்கள் .

இது சரியென்று
வாத்தியங்கள் கொட்டுகிறார்கள்
அடிக்கப்பட வேண்டியவர்களில்
இவளும் ஒருத்தியென்று,

சாபத்தால் கல்லானாள்
ராமன் மிதித்தான் பெண்ணானாள்
எவன் சாபமும் இல்லை
நான் மிதித்தேன் கல்லை
கற்புக்கரசன் வரவில்லை
கவ்விகொண்டது -என்
காலில் மட்டும் மெட்டி .

எழுதியவர் : subaselvi (29-Jul-13, 8:34 pm)
சேர்த்தது : subaselvi bodhu
Tanglish : adaiyaalam
பார்வை : 57

மேலே