கொஞ்சம் சிரிங்க பாஸ்..

அடிமைக்கும்,
கொத்தடிமைக்கும்
என்ன வித்தியாசம்?

ஒரு
பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....

அதுவே
அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

----------------------------------------------------------------------------
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா?
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

----------------------------------------------------------------------------
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....

ஏனெனில்
Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

----------------------------------------------------------------------------
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17
வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது
ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து
படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது,
" பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய
Mind'ல் அல்ல" என்கிறார்.

இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

----------------------------------------------------------------------------
நபர் - 1:
ஹோடேலில்
சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன்,
கையில்
காசு இல்லை.....

நபர்- 2:
அய்யய்யோ...
அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர்- 1:
அப்புறம்
பாக்கெட்'ல இருந்து
எடுத்துக் கொடுத்துட்டேன்...
----------------------------------------------------------------------------

எழுதியவர் : நவீன் (30-Jul-13, 12:19 pm)
சேர்த்தது : நவீன்குமார்
பார்வை : 380

புதிய படைப்புகள்

மேலே