ஒரு நாள் என்னும் கவிதை.(ரோஷான் ஏ.ஜிப்ரி)
மண்ணின் மார்பில்
அருவியின் தூரிகை
குளத்தை எழுதிச் செல்கிறது
கரைகள் வாசிப்பதற்கு ஏதுவாக..
காலை செடியென முளைக்கிறது வானில்
பொழுதுப் பூ மலர்கிறது குளத்தில்..
ஒரு நாள் என்ற கவிதையாய்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.