தற்கொலை
கண்ணில் பட்ட தூசி துடைக்க
எத்தணித்த சில நொடிகளில்
சாலையோரத்து சிறுமியின்
உடலை நசுக்கி உதிரம் பார்த்தது...
என் மோட்டார் வாகனத்தின்
ரப்பர் கால்கள் .....
உதவ எழுந்த போதுதான்
உணர்ந்தேன் - என் உடலும்
சிதைக்கப்பட்டதை....
மரணத்தின் வாயிலில்
மனைவியின் குரல்
"என்னங்க ஹெல்மெட்
எடுக்காம போறீங்க..."
"இருக்கட்டும் .....அதை வைத்து என்ன செய்ய?
அலட்சியத்தின்
அதிரடி பரிசு!
தலைகவசம் உன் பாதுகாப்புக்கு மட்டுமல்ல
உன்னை சுற்றி உள்ளவர்கள் பாதுகப்புக்கும்தான்
படியில் பயணம்
நொடியில் மரணம்
இது பஸ் மொழி
"ஹெல்மெட் இல்ல பயணம்
ஹெவனை போய் சேராது "
இது பைக் மொழி
ஆம் ......இது விபத்து அல்ல
தற்கொலை