இறைவனே .....?

அன்புள்ள இறைவனே
அளவற்ற அருளாளனே
அகிலம் படைத்து ஆள்பவனே
அழகாய் உலகை படைத்தவனே

உன் கிருபை தேடியே
பல கோடி உயிர்கள்
உலகில் அலையுதே
பாவிகள் நிறைந்த உலகிலே
உன் பாத தரிசனம் தினம் தேடுதே

தவறுக்கும் மறதிக்கும்
இடையில் எங்களை படைத்தாயே
பாவமே சூழ்ந்த எங்களை
ஒருபோதும் நீ வெறுத்து விடாதே

மறைவாய் நீயும் இருக்கின்றாய்
மண்ணில் வாழும் எங்களின்
மனதை கூட பார்க்கின்றாய்
மனிதன் மனதை ஆழும்
மன்னனாய் நீயே இருக்கின்றாய்

பலவீனமான எங்களை
தினம் ஏனோ நீயும் சோதிக்கின்றாய்
உன் முன் கையேந்தி நிற்கையில்
உன் அருளை அள்ளி தெளிக்கின்றாய்

எங்களை நீயே
நன்கு அறிவாய்
இறைவனே நீயே
எங்களை காப்பாய் ....

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (31-Jul-13, 4:48 pm)
பார்வை : 129

மேலே