bhagyanathan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : bhagyanathan |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 18 |
நஞ்சுண்ட வாயும்
பஞ்சுண்ட தீயுமாய்
உருக்குலையச் சுடராகும்
ஆற்றாமையில் ,
தீரும்வரை தீக்கிரையாகும்
எதுவும்
சேரும்வரை உள்ளம்
பருகும் காதலாய்
கண்டாய்
இளமை .....
வயது பாழாகி
நாள் திரைய
நடையும் விரையச்
சோர்ந்திடும்
பிணிக்குள்
மலர்ந்திடுவாய்
பாவை நோன்பின்
பட்டுடுத்திப்
பண்ணென்று.............!
மனிதா....
மானுடம் வள...
மரணம் கொல்...
எந்தவொரு மிருகமும்
தன்னைத்தானே
அழித்துக்கொல்வதில்லை.....
வெட்டுண்ட
கிளைகள்கூட
துளிர்விட துடிக்கும்...
நீ மட்டும் ஏன்
வாழும்போதே
மரணிக்க விரும்புகிறாய்?
கடவுளல்ல நீ
மரித்தும் உயிர்த்தெழ!
சிகரெட்
உன் சவம் புதைக்க - இப்பொழுதே
சின்ன சின்ன பெட்டிக்குள்
சாம்பல் சேகரிக்கிறாய்!
தவணைமுறையில் - நீ
செத்துக்கொண்டிருப்பதை அறியாமல்
நாகரீகமென நையாண்டி பேசுகிறாய்!
டாஸ்மாக்
உன் மரணத்திற்கு
முன் அனுமதி சீட்டு
வழங்குமிடம்!
விஷத்தில் தேன் ஊற்றி
அமுதென்கிறாய்!
உயிர்கொல்லி
எனத்தெரிந்து
பூச்சுமருந்து குடிப்பாயா?
விஞ்ஞானம் கோள்களில்
வாழ யோசிக்கிற
விடியும் முன்
விழித்த விழிகள்
காணல் நீராய்
காலைச் சூரியன்
கலங்கிய கண்ணில்
நீர்த்துளிகளாய்
நினைவுகள்............
கற்றை கூந்தலில்
ஒற்றை ரோஜா சூடிய
ஓவியப் பாவை
உடுத்திய தாவணியில்
மேகத்துள் மறைந்த
மஞ்சள் நிலவென மிளிர்ந்தாள்!
பிரம்ம கவியொன்று
மெல்ல நடை பயில
நாணம் உடன் வழிய
பூக்கோலமிட
பூலோகம் வந்தயிவள் யாரோ?
ஒற்றை ரோஜா
செடிக்கு அழகு!
ஒற்றை நிலா
வானுக்கு அழகு!
ஒற்றை குழந்தை
வீட்டுக்கு அழகு!
ஒருதலைக் காதல்
யாருக்கு அழகு!
என்னையும்
என் கண்ணீரையும்
ஏந்திக் கொண்ட
ஈரமுள்ள ஒரே ஜீவன்
என் தலையணை மட்டும்தான்!
விடியும் முன்
விழித்த விழிகள்
காணல் நீராய்
காலைச் சூரியன்
கலங்கிய கண்ணில்
நீர்த்துளிகளாய்
நினைவுகள்............
கற்றை கூந்தலில்
ஒற்றை ரோஜா சூடிய
ஓவியப் பாவை
உடுத்திய தாவணியில்
மேகத்துள் மறைந்த
மஞ்சள் நிலவென மிளிர்ந்தாள்!
பிரம்ம கவியொன்று
மெல்ல நடை பயில
நாணம் உடன் வழிய
பூக்கோலமிட
பூலோகம் வந்தயிவள் யாரோ?
ஒற்றை ரோஜா
செடிக்கு அழகு!
ஒற்றை நிலா
வானுக்கு அழகு!
ஒற்றை குழந்தை
வீட்டுக்கு அழகு!
ஒருதலைக் காதல்
யாருக்கு அழகு!
என்னையும்
என் கண்ணீரையும்
ஏந்திக் கொண்ட
ஈரமுள்ள ஒரே ஜீவன்
என் தலையணை மட்டும்தான்!
இனி...
தோட்டாக்களை விட்டு விட்டு
ரோஜாக்களை தொடுப்போம்!
அன்பெனும் தீவிரவாதம்
அகிலமெல்லாம் பரவட்டும்!
அந்நியன் என்றொரு வார்த்தை
அறவே அழியட்டும்!
யாதும் ஊரே யாவரும் கேளீர்
யதார்த்தம் ஆகட்டும்!
பஞ்சமெனும் வார்த்தைக்கு
பஞ்சம் வரட்டும்!
இயற்கை என்றும்
இறவாமல் இருக்கட்டும்!
இனியொரு
பூமி கிடைத்தாலும்
அது இதுபோல்
இல்லையென்றாகட்டும்!