தலையணை

விடியும் முன்
விழித்த விழிகள்
காணல் நீராய்
காலைச் சூரியன்
கலங்கிய கண்ணில்
நீர்த்துளிகளாய்
நினைவுகள்............
கற்றை கூந்தலில்
ஒற்றை ரோஜா சூடிய
ஓவியப் பாவை
உடுத்திய தாவணியில்
மேகத்துள் மறைந்த
மஞ்சள் நிலவென மிளிர்ந்தாள்!
பிரம்ம கவியொன்று
மெல்ல நடை பயில
நாணம் உடன் வழிய
பூக்கோலமிட
பூலோகம் வந்தயிவள் யாரோ?
ஒற்றை ரோஜா
செடிக்கு அழகு!
ஒற்றை நிலா
வானுக்கு அழகு!
ஒற்றை குழந்தை
வீட்டுக்கு அழகு!
ஒருதலைக் காதல்
யாருக்கு அழகு!
என்னையும்
என் கண்ணீரையும்
ஏந்திக் கொண்ட
ஈரமுள்ள ஒரே ஜீவன்
என் தலையணை மட்டும்தான்!

எழுதியவர் : பாக்யநாதன் (22-Jan-14, 12:23 pm)
Tanglish : thalaiyanai
பார்வை : 104

மேலே