குமரியாரே குமரியாரே

குமரியாரே!! குமரியாரே!!

எங்கே சென்றீர்கள்
எங்கும் காணலையே
எங்கே சென்றீர்கள் ??

கவிதை பல
காவியமாய் தந்தீரே!!

படித்து படித்து
மகிழ்ந்தேனே!!

கருத்து பல
மணிமணியாய் தந்தீரே!!

நினைத்து நினைத்து
ரசித்தேனே !!

சூரியனை நடு வானில்
ஒட்டவைத்து பார்த்தீரே!!

பண்ணையாரின் நிலம்
பற்றி நலம் நூறு கேட்டீரே!!

மாமன் வாரண்டி
மங்கள நாள் கொண்டு

நங்கை வளைகொண்டு
கும்மியடி என்றீரே!!!

இப்போது காணலையே
எப்போது வருவீரோ???

எழுதியவர் : நிலா மகள் (22-Jan-14, 12:28 pm)
பார்வை : 153

மேலே