எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனி... தோட்டாக்களை விட்டு விட்டு ரோஜாக்களை தொடுப்போம்! அன்பெனும்...

இனி...
தோட்டாக்களை விட்டு விட்டு
ரோஜாக்களை தொடுப்போம்!
அன்பெனும் தீவிரவாதம்
அகிலமெல்லாம் பரவட்டும்!
அந்நியன் என்றொரு வார்த்தை
அறவே அழியட்டும்!
யாதும் ஊரே யாவரும் கேளீர்
யதார்த்தம் ஆகட்டும்!
பஞ்சமெனும் வார்த்தைக்கு
பஞ்சம் வரட்டும்!
இயற்கை என்றும்
இறவாமல் இருக்கட்டும்!
இனியொரு
பூமி கிடைத்தாலும்
அது இதுபோல்
இல்லையென்றாகட்டும்!

பதிவு : bhagyanathan
நாள் : 19-Nov-13, 12:15 pm

மேலே