+இவன் எந்த சாதி?+
எமன் எந்த சாதி என்று
எவராலும் சொல்லமுடியுமா?
அவன்
எல்லா சாதிக்காரனையும் அல்லவா
சகட்டுமேனிக்கு தொடுகிறான்...
அவனுக்கு எந்த வேற்றுமையும் கிடையாது
அனைவரையும் ஒன்றாகவே மதிக்கிறான்!
அவனுக்கு இருக்கும்
இந்த ஒருமைப்பாடு
இந்த உலகத்தில்
ஏன் எவனுக்கும்
அதாவது சாதியை வைத்து
பிரித்து பார்ப்பவனுக்கு இல்லை!