நிலா.. நிலா...

நிலாநாள் இரவு-
சாலைப் பள்ளத்துச்
சகதிநீரில் நிலா..

ரசிக்கும் கவிஞர்
ரோட்டை மறந்தார்..

கூழாகியது நிலவு
கார்ச்சக்கரத்தில் மாட்டி..

கறைநிலா நிறைவில்
கவிஞரின் வேட்டி..

வாய்விட்டுச் சிரிக்குது
வானத்து நிலா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Aug-13, 7:39 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

மேலே