குடும்பம்..

பெரியவர் முதல் சிறியவர்
வரைப் பரிமாறிக்கொள்ளும்
பாசக்காவியம்..
மனக்கசப்புகள்
ஆயிரமென்ற போதிலும்
மனதில் குழப்பமின்றி
கூடி வாழும்
குடும்பங்களுமுண்டு..
தொட்டது விட்டதுக்கேல்லாம்
தனிக்குடித்தனம்
என்னும் மன
அவலங்களுமுண்டு
- இந்த சமுதாயத்தில் ...
குடும்பத்தின் உண்மையான
அர்த்தம் குடும்பமில்லா
எனைப் போன்றத்
தனி மரத்திர்க்குதான் தெரியும்....