கொடும!
கருப்பா பொறந்ததால
காளையர்க்கு நான் சப்ப பிகரு
காலேஜ் வாசல்ல கருங்குயில்
நான் நடக்கையில
நான் கேட்ட வசனம் மொக்க பிகரு
எல்லாருக்கும் வாரது மாதிரி
எனக்கும் வந்த உணர்ச்சியில
நான் பேச போனபோது
அவன் சொன்ன வார்த்த
அக்கா நீங்க எந்த காலேஜ்?
அங்கம் நிரஞ்சிருந்தும் அது
தங்கம் நிறத்துல இல்லாததால
மாப்பிள வீட்டாருக்கு
நான் டல்’லு பொண்ணு!
தேடி வந்த மாப்பிள வீடு
வீட்டுக்கு பொய் ‘கால்’ பண்றோம்’னு
வீட விட்டு போகும்போது
நான் விலை போகாத வைரம்
‘பொண்ணு கலையா இல்ல பரவாயில்ல
காசு பணம் எவ்வளவு தேறும்’
காரச்சேவை தின்றபடி
கருண கொண்ட ஒரு களவானி கூட்டம்
‘எம்மூச்ச நிறுத்தியாது முப்பது பவுன்
போடுறேன்’ எழுந்து பேச எந்தந்தைக்கு
தெம்பில்லாததால இருகண்ணயும்
தொடச்சி எந்தாய் சொன்னா.
என்ஜினியரிங் படிச்சவனுக்கு எம்பது
பவுனுதான் வேணும்’னு இரக்க
கூட்டம் எழுந்து போகையில
நா(ன்) பணத்தின் எச்சம்
எ(ன்) உயிரின் மிச்சம்!
கொடும கொடும’னு
கோயிலுக்கு போனேன்
அம்மா மாதிரியே அழகான பொண்ணுதான்
வேணும்’னு அந்த சந்தியில பிள்ளையாரு!
-தமிழ்மணி