தனிமை மகத்துவம் ..

அமைதியில்
பகலும்
கும்மிருட்டாக காட்சித் தரும் .
பழைய நினைவுகள்
விரைவு ரயில்
வேகத்திலோடும் ..
இனி என்ன
செய்வதென்ற
வினா வாட்டியெடுக்கும் ..
மனதிற்குள்
ஒன்றுமில்லாது
இறுகியிருக்கும் ..
உடல் முழுவதும்
பறப்பது போலும் தோன்றும்
ஆனால்
மிக கனமாக
இருப்பதாகத் தோன்றும் ..
சிலருக்கு
தனிமை இனிமை
என்றாலும்
பலருக்கு
அது
அபாயம் ...