உயிருக்கும் மேலானது நட்பு!!!!!
நட்பு நம்பிக்கையில் ஆனது ,
நட்பு நீடித்து வருவது,
நட்பு மறக்கக்கூடியது அல்ல,
நட்பு எளிதில் முறியாதது!
உண்மையான நட்பை அடைவது
கடினம்,
நிபந்தனைகள் கொண்ட
அன்பை கொண்டது உறவுகள்,
நிபந்தனைகள் அற்ற
அன்பை கொண்டது நட்பு!
அதிசயங்கள் நட்பால் மட்டுமே
சாத்தியமாகும்,
முடியாததும் முடியும்
நட்பில் மட்டுமே!
கிடைத்தற்கரிய பரிசு நட்பு!!!
நட்பு அன்பில் நிறைந்து வழிவது,
நட்பில் கரைகள் கிடையாது!
பின்னோக்கி பார்ப்பதில்
உறவுகள் வேதனைகளை
கொடுக்கலாம்,
ஆனால்
நட்பு பின்னோக்கி பார்த்தால்
மகிழ்ச்சியையே கொடுக்கும்!
மலர்களின் எண்ணிக்கை கொண்டு
தோட்டத்தின் அழகை அறியலாம்,
நட்பின் எண்ணிக்கை கொண்டு
வாழ்கையின் அழகை அறியலாம்
நட்புக்கு தூரம் கிடையாது,
நட்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது!
முகத்தில் தெரியும் அழுகையையும் சிரிப்பையும் காண்பது உறவு,
அழுகைக்கும், சிரிபிற்கும் பின் இருக்கும் காரணத்தை கண்டறிவது நட்பு!
நட்பு நம்பிக்கையிலானது,
நட்பு நீடித்து வருவது,
நட்பு மறக்கக்கூடியது அல்ல,
நட்பு எளிதில் முறியாதது!
நட்பு இல்லாத வாழ்க்கை வெறுமையை கொடுக்கும்!!
இதயத்தில் உணரப்பட்டு இதயத்தில் வாழ்வது நட்பு,
நிரந்தர மகிழ்ச்சி நட்பால் மட்டுமே உறுதி கொடுக்கவல்லது!!
விட்டு பிடிப்பது நட்பல்ல,
விட்டு கொடுப்பது நட்பு
விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல ,
கடைசிவரை விட்டு
விலகாமல் இருப்பதுதான்
உண்மையான நட்பு ...!
ஆயிரம் சொந்தம் நம்மை தேடிவரும் ,
ஆனால்
தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நல்ல
" நண்பன் " ..
வாழ்வில் நண்பர்களுக்கு
மட்டுமே நமக்கே
அறியாத நம்மை பற்றிய
ரகசியங்கள் தெரியும்!!!
நான் மிகவும் அதிஷ்டசாலி அப்படி
நண்பர்கள் கிடைத்ததற்கு ....
நாட்கள் நம்மை கடந்து சென்றாலும்
நினைவுகள் நம்மை
விட்டுப்பிரிந்து செல்வதில்லை
உயிருக்கும் மேலானது நட்பு!
என்றும் நட்பின் நினைவுகளுடன்
உங்கள் தோழி.....
தா.நிஷா மெஹரின்......
என் அனைத்து நண்பர்களுக்கும்
இனிய இனிய இனிய
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....
நண்பர்கள் அனைவருக்கும் இக்கவி சமர்ப்பணம்!!!!