மறுபிறவி

மறு பிறவியை
நீ நம்புகிறாயோ இல்லையோ
நான் நம்புகிறேன்
மரணத்தை நோக்கிய
நம் பயணத்தில்
பலமுறை மரிக்கின்றோம்
ஒரு காலம் பாசமாய்
இருந்தோர் நெஞ்சங்களில்
மீண்டும் பிறப்போம்
என்ற நம்பிக்கையுடன்
பிறப்பதற்கு முன்பே
அழுகிறேன் "வீல்" என்று!
என் பிரம்மா
மறுபிறவி தருவாயா?
-தமிழ்மணி