என் கிறுக்கி - 5
![](https://eluthu.com/images/loading.gif)
கிறுக்கியின் குரலில் கரைந்து போயிருந்தான் கிறுக்கன்...
மாலை 4.30 மணி அடித்தஉடன் வீட்டுக்கு கிளம்ப தயாரானான் கிறுக்கன்.. கிறுக்கி சென்ற பின்னே காத்திருந்து பின்தொடர்ந்து செல்லும் அவன் இம்முறை அவ்வாறு செய்யாமல் முன்னால் கிளம்பினான்... ஆனாலும் பின்னால் கிறுக்கி பின்தொடர்வதை அவளது கொலுசு காட்டிக் கொடுத்தது..
ஏதோ மறந்தவனாய் பள்ளி நோக்கி புறப்பட்டான்.. கிறுக்கி தன்னை பின்தொடர்கிறாள் என்ற காரணத்தினால் ... கிறுக்கியும் விடவில்லை கிறுக்கனை பின் தொடர்ந்து பள்ளி நோக்கி ... அவள் வருவது தெரியவேண்டும் என்பதற்காக கிறுக்கனை முந்தியபடி... கிறுக்கி முந்தியபோது கிருக்கனிடம் இருந்து வந்த புன்சிரிப்பு அவள் மேலிருந்த காதலை காட்டிக்கொடுத்தது... இருந்தாலும் கிறுக்கன்.
இயல்பாகவே நடந்து வருகிறான்.. வெளிக்காட்டாமல்...
உன்ட்ட கொஞ்சம் பேசணும் என்றால் கிறுக்கி மங்கிய குரலில்... ம்ம்ம் சொல்லு என்றான் கிறுக்கன் கனத்த குரலில்...
பயந்த சுபாவம் கொண்ட கிறுக்கியா இப்படி என்ற கிறுக்கன் தனது தசையை கிள்ளி பார்த்து கொள்கிறான் .. அட கனவா நனவா னு தான்...!!! அப்புறம் என்றவாறே பேச ஆரம்பிக்கிறாள் கிறுக்கி .. உடனே அதை தடுத்து நிறுத்தியபடி கிறுக்கன்,,, இங்க இருந்து பேசுனா தப்பா எடுத்துப்பாங்க வா நடந்துகிட்டே பேசலாம் என்கிறான் .. இருவரும் நடக்க ஆரம்பிக்கிறார்கள் தார் சாலை ... நந்தவன சாலையாக தெரிகிறது.... கடைத் தெருவில் கூடம் இருந்தும் யாரும் இல்லாதது போல் உணர்கிறார்கள்...
காக்கைகளெல்லாம் குயில்களாக... மாலை கதிரவனோ கிறுக்கியின் முகத்தை மேலும் பிரகாசமாக்குகிறான்...
கிறுக்கி ஏதேதோ பேசிக்கொண்டிருக்க கிறுக்கனின் காதுகளிலோ அரைகுரையாகதான் விழுகிறது ..
எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப புடிக்கும் தெர்யும... என்று கிறுக்கி கேட்க ... தெரியாது என்கிற செய்கையில் கிறுக்கன் தலையாட்ட .. சமத்துடா என்றபடி கிறுக்கனின் கன்னத்தில் கிள்ளியபடி கிறுக்கி "தேவதையாக" ஓடுகிறாள்... கிறுக்கனோ காதலில் "பேயரைந்தபடி" நிற்கிறான் ...
இன்னும் கிறுக்காக்குவாள்...