சந்திப்பு

பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்க கிடைக்கும் வாய்ப்பின் முடிவு மீண்டும் மீள முடியாமல் செய்து விடுமோ என்ற பயம் மட்டும்..மனதில்!

அழித்து விட முடியாத அளவிற்கு பய உணர்வே மனம் முழுவதும் ததும்பி நிற்கிறது.

முதல் பிரிவையே தாங்கி கொள்ள முடியவில்லை.. இதில் மீண்டும் ஒரு சந்திப்பு.. அதில் ஒரு பிரிவு... மனம் தாங்கி கொள்ளுமா ??

உன்னை சந்திக்கும் ஆவலில் மட்டுமே என் வாழ்க்கை நகர்கிறது.

நம் அடுத்த‌ சந்திப்பு பிரிவால் பிரிக்க முடியாத அளவில் இருக்க வேண்டும். அதற்காக காலம் முழுவதும் காத்துக் கொண்டிருப்பேன்.

அதுவரை தயவுசெய்து சந்திக்க முயற்சிக்காதே... தாங்கும் மனநிலை நிச்சயம் என்னிடம் இல்லை!

எழுதியவர் : மலர் (3-Aug-13, 7:04 pm)
சேர்த்தது : மலர்
Tanglish : santhippu
பார்வை : 133

மேலே