நண்பர்கள்
அன்பென்றால் அடைக்கும் தாழில்லை
நட்பென்றால் தடுக்கும் வேலி இல்லை
தாய்மடி போல் நட்பென்பேன்
தோழனும் தோழியும் தோள் என்பேன்
நண்பர்கள் தான் வாழ்வென்பேன்
வாழ்க்கையில் உறவுகள் உயர்வென்றால்
நட்பை நான் உயிரென்பேன்
உயிருக்கும் மேல் ஒன்று உள்ளதென்றால்
அது என் நண்பர்கள் தான்னென்பேன்
நட்பென்றால் நீங்களுண்டு
உங்களைத் தவிர வேராருண்டு
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
