கண்ணாடி மேசை

நான் எழுதிய கவிதை
அருமையெனச்சொல்லி,
அதை தனியே எடுத்து,
அலுவலக மேசைக் கண்ணாடியின் கீழே
வைத்திருப்பதாய்ச் சொன்னார் நண்பர் ஒருவர்.

எனக்கும் அப்படி வைக்க
கவிதைகள் உண்டு ஏராளம்..
யார் தருவீர்கள் ஒரு வேலையும்
கண்ணாடிபோட்ட மேசையும்..?

எழுதியவர் : கே பி கிருஷ்ணகுமார் (7-Aug-13, 10:58 am)
சேர்த்தது : பா ஆ ஞானசேகர்
பார்வை : 144

மேலே