"ஆடி" கொண்டாடுவோம்...
ஆடிக் கிழமைகள் அனைத்தும்
தேடித் பார்த்து செய்வோம்
நாடி ஓடி வணங்குவோம்
பாடி அம்மனை போற்றுவோம்
குடும்பத்து உறவுகள் சேர்ந்திடுவோம்
பொங்கலும் கூழும் பொங்கிடுவோம்
படையல் போட்டே மழிந்திடுவோம்
போவோர் வருவோர்க்கும் தந்திடுவோம்
வேட்டை வசூல் வேண்டாமே
வேண்டுவோர் வந்து கொடுக்கட்டுமே
கூத்து ஆட்டம் தவிர்ப்போமே
கலைகள் வளர்க்க வைப்போமே
பால் நீர் குடமெடுப்போம்
பூசை படையல் போட்டிடுவோம்
காவடி கரகம் ஆடிடுவோம்
பூமிதி தீமிதி நடந்திடுவோம்
பக்தி பெரும் கூட்டம் கூடும்
உக்தி எல்லாம் செய்து பார்க்கும்
சக்தி அருள் என்றும் நாடும்
முக்தி கூட கேட்டு வைக்கும்
குழந்தைகள் குமரிகள் கொண்டாட்டம்
வாலிப இளைஞர்கள் குதுகலம்
பொதுவாய் எங்கும் பக்திமயம்
பார்க்கும் எதிலும் சக்திமயம்

