கண்ணில் என்ன ஈரம்

கண்ணில் என்ன ஈரம் , துடைத்து எறிந்திடு !
நெஞ்சில் என்ன பாரம் , சிரித்து மகிழ் திடு!
கவலை அலைகள் உன்னை தழுவலாம் ,
இழுத்து செல்ல அனுமதிக்கலாமா ?
கூரை இல்லை என்று வருந்துவதா ?
வானம் எதற்கு உள்ளது ?
காலணி இல்லை என்று வருந்துவதா ?
அங்கே கால் இல்லாமல் ஒருவன் செல்கிறான் பார் !
சூறாவளி அடிக்கும், பின் சுழன்று அடங்கும் .
நோட்டு மழையும் , ஸ்வர்ண மெத்தையும்
உழைப்பின் வியர்வைகள் உலர்ந்த பின்னால் தான் கிடைக்கும்.
-

எழுதியவர் : சுந்தரம் கிருஷ்ணசுவாமி. (8-Aug-13, 11:24 am)
சேர்த்தது : sksundaram64
Tanglish : kannil yenna eeram
பார்வை : 85

மேலே