வாழ்கையை தொலைத்துவிட்டாள்.
சூரியனும் மறைந்து விட்டான் !
சந்திரனும் இன்று . தொலைந்து விட்டான்!
மின்மினி நட்சத்திரங்களின் வெள்ளிச்சதில் ,
தவளை மொழி கேட்டுக்கொண்டு ,
அழும் உன் குழந்தை யை தட்டி தூங்க வை !
சிறிது உன் கணவணுடன் கூடிவிட்டு
பெண்ணே , நீ வெறித்து
தேட ஆரம்பிப்பாய் !
உன் வாழ்க்கையை
இந்த நான்கு சுவற்றுக்குள் தானே
எங்கோ தொலைத்து விட்டாய்.