தேடல் என்பது தேடல்தான்

எனக்காகத் தயாரிக்கப்பட்ட
கூண்டு
தனிமையால்
வெதும்பிக் கிடக்கிறது

அதன் ஈர்ப்பும் அமைப்பும்
எளிதில்
நம்மை ஏமாற்றக் கூடியதாக
இருக்கிறது

அதனைப்
பார்வையிட்டவர் எண்ணிக்கை
பட்டியிலிட முடியாதது

அதைவிடவும்.,
கூண்டிற்குள் வைத்து
காட்சிப் பொருளாக்கிடக்
காத்திருப்போர்
எண்ணிக்கை அதிகம்

பிரியங்களாகவும்
மனோபாவங்களாகவும்
தங்களுக்கு உரியதாகவும்
மலிந்துபோன.,

எனக்காக
நிறைத்து வைக்கப்பட்ட
தீனியானது
என் பசியை
மறைத்து விடுகிறது

எதனாலும்
எனக்கானதாலும்
என்னைச் சிறைப்படுத்துவதிலும்
தோல்வியே மிஞ்சுகிறது

இப்போது
ஏமாற்றத்திற்கான விடையறிய
தங்கள் கூண்டிற்குள்
நுழைந்து பார்க்கிறார்கள்

இதில் இருந்து
வெளியேறிட வழியின்றி
திகைக்கிறார்கள்

இறங்கும் கூண்டு
என்னை மேலேற்றுகிறது

நான்
இன்னும் பறக்கிறேன்
பயணிக்கிறேன் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (8-Aug-13, 4:07 pm)
பார்வை : 210

மேலே