கல்லறைக்கு முன் காசோலை (சிகரெட்)
இரு விரல் மத்தியில்.....
இருதய கொல்லி
உதிரும் நெருப்பில் வீழும் சாம்பலோ.....
உறவுகள் நெஞ்சத்தை சுடும் சூடு
விடைபெறா இன்பத்தின் விளைவோ .....
விடுபெற முடியாத இறப்பின் சோகம்
வான்நோக்கி அவன் விட்ட புகை கொல்லி.....
மண்நோக்கி வீழ்த்தி விட்டு வைத்தது கொல்லி
மடிந்து போன உடலை கண்டு ......
மறுபடி எப்போது காண்போம் என்று
மயங்கி அழுகின்றனர் மனைவியும் மக்களும்
சிகரெட் பெட்டியின்.....
எண்ணிக்கையை எண்ணியவன்
எதிர்காலத்தை எண்ணமறந்தான்
புகை பிடித்தால் உடல் நலத்திற்கு கேடு.....
வாசகம் மட்டுமே மனதில் பதிந்தது
வாசித்தவனோ இன்னும் நெருப்பு பெட்டியை....
நேசித்து கொண்டுதான் இருக்கிறான் ........
-அமுத நிலா