நிலா சிரிப்பு

மொட்டை மாடியில்

சோறு தின்ன

அழுது அடம் பிடிக்கும் மகன்

பவனுக்கு ...

சோறு ஊட்டினாள்

அம்மா ஜமுனா ...

இரண்டு வாய் சோறு தின்று

வேண்டாம் என அடம் பிடித்தான் பவன்

"அதோ...அங்க நிலா பாரு "...என்று சொல்லி

அம்மா ஜமுனா சோறு ஊட்ட

"யம்மா எனக்கு நிலா வேணும்"

என்றான் பவன்


"அப்பா கிட்ட சொல்லி வான்கிதரென்....நீ சாப்பிடு "

என பொய் சொல்லி ஜமுனா சமாளிக்க

"முதல்ல நீ வான்கிகொடு அப்புறம் சாப்டறேன் "

என்றான் பவன் மழலை மொழியில்

அம்மா ஜமுனா முழிக்க

வானத்தில் நிலா மட்டும் சிரித்தது

"சின்னதாக "

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (13-Aug-13, 1:07 am)
Tanglish : nila sirippu
பார்வை : 244

மேலே