சுசித்ரா.... விற்கு பிறந்த நாள் வாழ்த்து.....!
சு- நாளை சுதந்திர தேசத்தில்
அடிமை படுத்திய
ஆங்கிலேயனை அழிக்க
பிறந்த வேலு நாச்சியின் மகளுக்கு
இன்று பிறந்த நாள்...
சி- சித்திரை நிலவில் ஓர்திரை
கிழித்து பார்திரை கண்ட
பண்மகளின் எளிமைக்கு
இன்று பிறந்த நாள்..
த்- த்தருணம் இவ்வுலக இசைக்கே
சரணம்.. இவள் பாடலின் வர்ணம்
பூலோகமும் மிரளும், இவள் குரலும்.
ரா- ராஜா ராஜா சோழ வமசத்தில்
பிறந்து சென்னை பட்டிணத்தில்
பண்பாடிய சேர நாட்டு ஜெ-மங்கைக்கு
இன்று பிறந்த நாள்...!
இவள் பிறந்த நாளில் என் மை-
கிறுக்கு கிறுக்கு நிறுத்தாதே...
இன்னும் கொஞ்சம் புகழ்ந்து...
கோபப்படாதே என் கவியே...!
பூக்களும் வர்ணமும் சேர்ந்து
தொடுத்த நந்தவன தேருக்கு
இன்று பிறந்த நாள்...
கல்லும் உளியும் சேர்ந்து
வடித்த சிற்பத்து சிலைக்கு
இன்று பிறந்த நாள்...
தமிழும் இலக்கணமும் சேர்ந்து
எழுதிய இசைக்கவிதைக்கு
இன்று பிறந்த நாள்...
இசையும் குரலும் சேர்ந்து
படித்த பாட்டுக்கு
இன்று பிறந்த நாள்...
விஜய் டிவியில்...
கால் முத்தம் பொழிந்து
கடவுள் குழந்தைகளோடு
கண்சிமிட்டும் கல்சிலைக்கு
இன்று பிறந்த நாள்...!
சந்திரனும் சூரியனும்
அளித்த அறிவுப் படி
இந்திரன் படைத்த
மயக்கும் பாடகி சுசிக்கு
இன்று பிறந்த நாள்...!
என் உடலும் உள்ளமும்
இசையினுல் ஒன்றாய் சேர்ந்து
உயிரின் உருவமாய் நிற்கும்
என் கட்டி தெய்வத்திற்கு
இன்று பிறந்த நாள்...
என் இறைவனின் மகளே
உனக்கு என் இனிய எளிமை
பிறந்த நாள் வாழ்த்துகளோடு
வாழ்க பல-பல்லாண்டு..!
உன் குரலால் பண் பாடு..!
என்றும் உன்னை என்னுள்
வைத்து இன்று முதல் உறங்காமல்
உனக்காக தேசம் என் சுவாசத்தோடு..
நல்லதே செய்..
உன்னால்தான் இன்னும்
உலகம் உருள்கிறது......!
இப்படிக்கு....!
உன் காலடிக்கு
தவம் கிடக்கும்
கருப்பு வாசகம்..!