மழைகுறள்

1.மழை சென்னைக்கு ஆற்றுமுதவி இவை
எப்பொழுது வருமெனும் சொல்

2.எப்பகுதி சென்றார்க்கும் மழையுண்டாம் மழையில்லை
சென்னையில் குடிபுகுந்த வர்க்கு

3.காலத்தினால் சேர்த்த தண்ணீர் சிறிதெனினும்
கோடையில் மிகவும் பெரிது

4.வராமல் வந்த மழைக்கு சென்னையும்
மதுரையும் சொல்லும் நன்றி

5.மழைநீரை சேமித்தவர் மகிழ்வார் மகிழார்
மழைநீரை சேமிக்கா தவர்

எழுதியவர் : ப.சா.ராஜமாணிக்கம் (15-Aug-13, 4:03 pm)
சேர்த்தது : bsrajamaneekam
பார்வை : 81

மேலே