விடுதலை
![](https://eluthu.com/images/loading.gif)
சுதந்திர கவிதை
சிந்திய
எழுதுகோல்
இன்று
என் தேசத்து
சுதந்திரத்தை எண்ணி
(காகிதத்தில்)
கண்ணீர் சிந்துகிறது
அந்நியர்கள்
சுரண்டிய
நம் தேசத்தின் வளத்தை
சுதந்திரமாய்
நாமே
விற்றுத் தீர்க்கிறோம்
காடு
மலை
கரையென
கூறு கூறாக
விற்பனையாகிறது
நம் தேசத்தின் வளங்கள்
கேவலம் காசுக்காக
எத்தனை
வறுமை என்றாலும்
தாயின்
உடல் உறுப்புக்களை
கூறு கூறாக விற்று
காசாக்கும்
ஈன பிறவி அல்ல
நம் இனம்
வேண்டி பெற்ற
சுதந்திரம்
வேண்டாம் என்பான்
பாரதி
இதையெல்லாம்
பார்க்க நேர்ந்தால்......