[474] குடைகள் பலவிதம்

குடைகள் பலவிதம்
------எசேக்கியல் களியப்பன்----
வண்ண வண்ணக் குடை-பல
வடிவுகள் கொண்ட குடை!
விண்வ டிக்கும் நீரைத் -தலையில்
விழாது தடுக்கும் குடை!
வாண்டு கட்கு தலையில் -வைத்து
மாட்டிக் கொள்ளும் குடை!
பாண்டு9Band) சூழ்ந்த மணமகன் -தலைக்கு
பட்டுத் துணியில் குடை!
வெயிலை மறைக்கப் பிடித்தாலும் -உள்ளே
விசிறி வைத்த குடை!
இருளில் மழையில் சென்றாலும்- ஒளி
இதமாய்க் கொடுக்கும் குடை!
கைப்பிடி யோடே கைத்தடியும்-தாத்தா
கையில் கொடுக்கும் குடை!
இரண்டு மூன்று மடிப்புகளில்- பையில்
எடுத்துத் போகும் குடை!
அரசுத் தலைவர் மேல்பிடிக்கக் -காற்று
அடித்துப் பின்னால் மடங்கிவிடின்-விரசாய்
மீண்டும் விரியும் குடை!--பலர்
விரும்பும் படங்கள் கொண்டகுடை!

எப்படிக் குடைகள் பிடித்தாலும்-நாம்
என்றும் விரும்புவோம் நல்லமழை!
========= **=========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (16-Aug-13, 10:29 am)
பார்வை : 96

மேலே